சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2022 8:12 PM IST (Updated: 25 Feb 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே மூலங்குடியில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே மூலங்குடியில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மூலங்குடி கிராமம் 
கூத்தாநல்லூர் அருகே திருவாரூர்- மன்னார்குடி வழித்தடத்தில் மூலங்குடி கிராமம் உள்ளது. இந்த மூலங்குடி கிராமத்தையொட்டி சாலையோரத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. மன்னார்குடி, கூத்தாநல்லூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற நகர பகுதிகளுக்கும், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், புள்ளமங்கலம், சேந்தங்குடி, புத்தகரம், வேளுக்குடி, சிந்தனங்குடி போன்ற கிராமப்புற பகுதிகளுக்கும் சென்று வருவதற்கு பஸ் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையில் இந்த பயணிகள் நிழற்குடையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
மேலும் பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பயணிகள் நிழற்குடை  சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் உள்பகுதியில் இரண்டு ஜன்னல்கள்  உடைந்தும், கட்டிடத்தில் சிறு, சிறு விரிசல்கள் ஏற்பட்டும், போதிய பராமரிப்பு இன்றி உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---


Next Story