கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 25 Feb 2022 10:03 PM IST (Updated: 25 Feb 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை பார்வையாளராகவும், கணினி ஆசிரியர்களை தொழில்நுட்ப உதவியாளராகவும் மாநிலத்தின் கடை கோடியில் பணி செய்ய வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்யாமல், தொடர்ந்து ஆசிரியர் விரோத போக்கை கையாண்டு வருவது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முறையான பணி நியமன ஆணை வழங்காமல், தொலைபேசி மூலம் முந்தையநாள் தகவலை தெரிவித்து அங்கும், இங்கும் அலைக்கழிக்க செய்து, தேர்வு பணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவது. 12 மணி நேரத்திற்கு மேல் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்காதது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில இணை பொருளாளர் பூபதி முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சையராஜா, மாவட்ட செயலாளர் திருவேங்கடம், துணை செயலாளர் செரில், பொருளாளர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story