அரக்கோணத்தில் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது


அரக்கோணத்தில் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2022 11:05 PM IST (Updated: 25 Feb 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை ேசர்ந்தவர் பாலாஜி (வயது 38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரமணி. இவர், அரக்கோணத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

பாலாஜி அவரது மனைவி ரமணியிடம் பணம் கொடுப்பதற்காக மகேந்திரவாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் அரக்கோணத்திற்கு சென்றார். 

அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே சென்ற போது திடீரென 3 பேர், பாலாஜியை வழிமறித்து கத்தியை காட்டி மரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் அவர்கள், பாலாஜியை தாக்கி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 1,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அரக்கோணத்தை அடுத்த வளர்புரத்தை சேர்ந்த சுபாஷ் (22) உள்பட 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுபாசை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story