ராமேசுவரத்தில் வருகிற 1-ந் தேதி முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி ராமேசுவரம் கோவிலில் பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும், சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேசுவரம்,
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி ராமேசுவரம் கோவிலில் பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும், சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவராத்திரி
ராமேசுவரம் கோவிலில் கடந்த 21-ந் தேதி மாசி மகா சிவராத்திரி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் 5-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து ரத வீதிகளில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 8 மணிக்குமேல் சாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்று மாசி மகா சிவராத்திரியாக இருப்பதால் அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை ஆனது பகல் முழுவதும் மற்றும் இரவு முழுவதும் திறக்கப்பட்டு இருக்கும். அன்று மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரையிலும் இரவு முழுவதும் சாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் மற்றும் கங்கை தீர்த்தத்தால் மாசி மகா சிவ ராத்திரி சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
கோவில் நடை
மேலும் வழக்கமாக பகல் 1 மணிக்கு அடைக்கப்படும் நடையானது வருகிற 1-ந் தேதி மகா சிவராத்திரி அன்று அடைக்கப்படாமல் பகல்- இரவு முழுவதும் திறந்து இருப்பதுடன் 2-ந்தேதி பகல் ஒரு மணிக்கு தான் கோவில் நடை அடைக்கப்படும் என்றும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவா டானை பெரியகோவில், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில், திருஉத்தரகோசமங்கை, திருபுல்லாணி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் மகாசிவராத்திரி அன்று முழுவதும் கோவில் நடை திறந்து இருக்கும்.
Related Tags :
Next Story