சிவகாசி மாநகராட்சி துணை மேயர் பதவி யாருக்கு?


சிவகாசி மாநகராட்சி துணை மேயர் பதவி யாருக்கு?
x
தினத்தந்தி 26 Feb 2022 12:25 AM IST (Updated: 26 Feb 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி மாநகராட்சி துணை ேமயர் பதவி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சி துணை ேமயர் பதவி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
முதல் பெண் மேயர் 
சிவகாசி மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க கவுன்சிலர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளனர். சிவகாசி மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களுக்கு இடையே தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  கட்சியின் தலைமை யாருக்கு மேயர் பதவி வழங்குவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே முக்கிய நிர்வாகிகள் 3 பேர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. 
துணை மேயர் பதவி?
இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சியின் துணை மேயர் பதவி ஆண் கவுன்சிலர்களுக்கா அல்லது அந்த பதவியும் பெண் கவுன்சிலர்களில் ஒருவருக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. 
கட்சி பிரமுகர்கள், அரசியல் விமர்சகர்கள், பொதுமக்கள் சிவகாசி துணை மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்படும் என்றும் பரபரப்பாக பேசி வருகிறார்கள். அதேநேரத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும் துணை மேயர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேயர் பதவி கிடைக்கும், துணை மேயர் பதவி கிடைக்கும் என்றும் மூத்த அரசியல்வாதிகள் பலர் பலத்த எதிர்பார்ப்புடன் காத்து வருகிறார்கள். 
வருகிற 2-ந் தேதி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று இதற்கு விடை தெரியும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Next Story