கடினமாக உழைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்


கடினமாக உழைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்
x
தினத்தந்தி 26 Feb 2022 12:44 AM IST (Updated: 26 Feb 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

கடினமாக உழைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் ேமகநாதரெட்டி அறிவுரை வழங்கினார்.

விருதுநகர், 
கடினமாக உழைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் ேமகநாதரெட்டி அறிவுரை வழங்கினார். 
கலந்துரையாடல் 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 பஞ்சாயத்துகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணவ-மாணவிகளை கண்டறிந்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை கலெக்டர் நேரில் சந்தித்து கலந்து பேசும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
அதன்படி சாத்தூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர்களிடம் எந்தத் துறையில் ஆர்வம், பிடித்த விளையாட்டு வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
வாழ்வில் சாதிக்கலாம் 
 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., மருத்துவம், வக்கீல், விஞ்ஞானி, தமிழாசிரியர், கால்நடை மருத்துவர், ஹோமியோபதி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
 அவர்களிடம் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:- 
 இப்போது உள்ள சூழ்நிலையில் உங்கள் பெற்றோர்களை காட்டிலும் உங்களுக்கு வாழ்க்கையில் படிப்பதற்கும், உங்கள் இலக்கு ஆசைகளையும், லட்சியத்தையும் அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடும், தைரியத்துடனும் கடினமாக உழைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்.
புத்தகம் பரிசு 
வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. எனவே வாழ்க்கையில் தோல்வியிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 20 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பொது அறிவு மற்றும் அகராதி புத்தகங்களை கலெக்டர் பரிசாக வழங்கினார்.

Next Story