சொத்து தகராறில் தந்தையை ெகான்றவர் கைது


சொத்து தகராறில் தந்தையை ெகான்றவர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2022 2:01 AM IST (Updated: 26 Feb 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் தந்தையை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

சொத்து தகராறில் தந்தையை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

ெசாத்து தகராறு

மதுரை பெருங்குடி அருகே உள்ள வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யர் (வயது 74). இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2-வது மகன் அமாவாசை (42), கட்டிடத்தொழிலாளி. இவருக்கும் தந்தை அய்யருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அமாவாசை மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் சொத்து பிரிப்பது தொடர்பாக தந்தை அய்யர் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதில் கோபமடைந்த அமாவாசை வீட்டில் இருந்த கடப்பாரை கம்பியால் தந்தை அய்யரை தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைது

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், கொலையான அய்யரின் உடலை மீடடு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொலை செய்த அமாவாசையை கைது செய்தனர்.
1 More update

Next Story