தர்மபுரியில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் நிர்வாகி ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அன்பு, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் சந்தோஷ், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகி ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் சமமான வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும். சித்சபையில் ஏறி நின்று வழிபாடு நடத்த பெண் பக்தருக்கு அனுமதி மறுத்த கோவில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story