சுரண்டை: வியாபாரி விஷம் குடித்து சாவு


சுரண்டை: வியாபாரி விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 26 Feb 2022 3:19 AM IST (Updated: 26 Feb 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரி விஷம் குடித்து சாவு

சுரண்டை:
சுரண்டை அருகே திருச்சிற்றம்பலம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் சொக்கையா (வயது 42). இவர் பூஞ்செடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரம் சரியில்லாததால் அக்கம்பக்கத்தினரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் அதிகமாக இருந்ததால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு பூச்செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். காலையில் அவரது குடும்பத்தினர் பார்த்தபோது விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்ததும் போலீசார் சென்று உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story