மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2022 6:37 PM IST (Updated: 26 Feb 2022 6:37 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வடமதுரை கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரியபாளையத்தில் இருந்து சென்னை நோக்கி மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி கொண்டு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் போலீசார் அந்த வாலிபரை துருவி, துருவி விசாரித்தனர். அப்பொழுது அந்த வாலிபர் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே இருந்த மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார். அவர் சென்னை, காசிமேடு சிங்காரவேலர் நகர், 4-வது தெருவை சேர்ந்த பாபு என்ற பல்சர் பாபு (வயது 33) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story