மோட்டார் சைக்கிள் ஷோரூமில் திருடிய கொள்ளையன் கைது


மோட்டார் சைக்கிள் ஷோரூமில் திருடிய கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 26 Feb 2022 7:43 PM IST (Updated: 26 Feb 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணம் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கு பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து ஷோரூம் உரிமையாளர் சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவருடைய மகன் ஜெபசிங் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராமசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஷோரூமுக்கு சென்றனர்.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணம் திருடியவர் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு சர்ச் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தமிழ்வாணன் (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தமிழ்வாணனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சங்கிலி பறிப்பு, கடைகளில் திருட்டு உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு உடையவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தமிழ்வாணனை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story