ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
நாகையில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வெளிப்பாளையம்:
நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் துரைமுருகு தலைமை தாங்கினார். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் குமார், உயர்நிலைப்பள்ளி- மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் அருண் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பார்வையாளராகவும், கணினி ஆசிரியர்களை தொழில்நுட்ப உதவியாளராகவும் பணி செய்ய வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும். பாலிடெக்னிக் தேர்வுகளுக்கு பணியாற்றிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படி, பயணப்படிகளை உடனடியாக வழங்க வேண்டும். 12 மணி நேரத்திற்கு மேல் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அமைப்பு செயலாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story