மீனவர்கள் வலையில் அதிக அளவு சிக்கிய மீன்கள்
கோடியக்கரை பகுதியில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கின. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
கோடியக்கரை பகுதியில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கின. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்பிடி சீசன்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 நாட்களாக கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு மிக குறைந்த அளவு மீன்கள் சிக்கி வந்தன. இதனால் மீன்பிடிக்க சென்ற செலவுக்கு கூட மீன்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.
அதிக அளவு சிக்கிய மீன்கள்
இந்த நிலையில் நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில்
முரல்மீன், திருக்கைமீன் உள்ளிட்ட வகை மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலம் தொடங்கியது முதல் மீன்வரத்து குறைவாக இருந்து வந்தது. சீசன் முடியும் நேரத்தில் 5 மாதங்களுக்கு பிறகு தற்போது ஷீலா, காலா, வாவல், முரல், திருக்கை, மத்தி மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவில் சிக்கி வருகிறது.
நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி
இந்த மீன்கள் கேரளாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
----
Related Tags :
Next Story