சூளகிரி வட்டார கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை


சூளகிரி வட்டார கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2022 10:13 PM IST (Updated: 26 Feb 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி வட்டார கல்வி அலுவலரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சூளகிரி:
சூளகிரி வட்டார கல்வி அலுவலரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பணி பதிவேடு 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் சூளகிரி வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர் அன்னையப்பா (வயது 45). இவர் கடந்த 29.12.2021 முதல் அங்கு பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்த போது ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான பணி விவரங்களை பதிவு செய்வதற்காக பணி பதிவேட்டை வீட்டிற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற வட்டார கல்வி அலுவலர் லட்சுமி நாராயணாவிடம் அவர், ஆசிரியர்களின் பணி பதிவேட்டை ஒப்படைக்கவில்லை. இது குறித்து ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் விசாரணை நடத்தினார்.
பணி இடைநீக்கம்
பின்னர் அவருடைய பரிந்துரையின் பேரில் பணி பதிவேட்டை ஒப்படைக்காமல் இருந்த காரணத்திற்காக சூளகிரி வட்டார கல்வி அலுவலர் அன்னையப்பாவை, பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

Next Story