நாகை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பியோட்டம்
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெளிப்பாளையம்:
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீடுபுகுந்து திருட முயற்சி
நாகையை அடுத்த நரியங்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டில் திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்ட 2 பேரையும், நாகை டவுன் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
விசாரணையில் அவர்கள் கோவை தொண்டாமுத்தூர் பிள்ளையார் கோவில் முதல் தெருவை சேர்ந்த பாபுகிருஷ்ணன்(வயது 22), நாகூர் பகுதியை சேர்ந்த ராஜீ(32) என்பது தெரிய வந்தது.
பாபுகிருஷ்ணன் உடலில் காயங்கள் இருந்ததால், அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கைதி தப்பி ஓட்டம்
இந்த நிலையில் பாபுகிருஷ்ணன் நேற்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் காமேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கைதி பாபுகிருஷ்ணனை வலைவீசி தேடிவருகின்றனர்.
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த கைதி தப்பியோடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story