1,264 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
1,264 மையங்களில்...
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராம்.கணேஷ் கூறியதாவது:-
போலியோ நோயை முற்றிலும் அகற்ற 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் 1,264 மையங்களில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
மேலும், பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் மையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள், ெரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் சிறப்பு மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அதேபோல், ரெட்கிராஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளும் பொதுமக்களின் தேவைக்காக சிறப்பு மையங்கள் அமைத்து செயல்பட உள்ளன.
5 ஆயிரம் பேர்
இந்த பணியில் பொது சுகாதாரத்துறையுடன் சமூகநலத்துறை, ஊட்டச்சத்துத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சித்துறை, கல்வித்துறை ஆகியத்துறைகள் ஒருங்கிணைந்து 5 ஆயிரத்து 60 பேர் பணியாற்ற உள்ளார்கள். எனவே, பொதுமக்கள் ஐந்து வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும், மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து குழந்தைகளை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






