சாலையோரத்தில் முறிந்து விழும் நிலையில் மரக்கிளைகள்
ராமேசுவரம்-தங்கச்சிமடம் சாலையோரத்தில் முறிந்து விழும் நிலையில் மரக்கிளைகள்
ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே உள்ளது தங்கச்சிமடம் பகுதி. அதுபோல் ராமேசுவரம் வரும் அனைத்து வாகனங்களும் பாம்பன் பாலத்தை கடந்து தங்கச்சிமடம் சாலை வழியாகவே ராமேசுவரம் வந்து செல்ல வேண்டும். இந்தநிலையில் ராமேசுவரம்- தங்கச்சிமடத்திற்கும் இடைப்பட்ட வில்லூண்டி தீர்த்தம் செல்லும் சாலை எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமையான பெரிய அரச மரம் ஒன்று வளர்ந்து நிற்கின்றது. இதனிடையே இந்த அரச மரத்தில் ஒரு பெரிய கிளையானது முறிந்து எந்நேரமும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுவது போன்று இருந்து வருகிறது. பலத்த காற்று வீசும் பட்சத்தில் அரசமரத்தின் உள்ள பெரிய கிளையானது கண்டிப்பாக அந்த சாலை வழியாக செல்லும் கார், வேன், பஸ்கள் உள்ளிட்ட ஏதேனும் வாகனங்கள் மீது முறிந்து விழும் பட்சத்தில் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே தங்கச்சிமடம் அருகே சாலையோரத்தில் எந்நேரமும் முறிந்து விழும் நிலையில் உள்ள பெரிய அரச மரத்தின் கிளையை உடனடியாக வெட்டி அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறை அல்லது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
Related Tags :
Next Story