தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் பெண் சாவு; மகள், மருமகன் காயம்

தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் பெண் இறந்தார். இவரது மகள், மருமகன் காயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் பெண் சாவு; மகள், மருமகன் காயம்
Published on

தேன்கனிக்கேட்டை:

தேன்கனிக்கேட்டை கித்துவாய் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி நஸ்ரின் தாஜ் (வயது 45). இவர் தனது மகள் நஸ்மா தாஜ், மருமகன் கபிர் அகமது (35) ஆகியேருடன் சாமநத்தம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் சென்றார். தேன்கனிக்கேட்டையில் இருந்து தளி செல்லும் சாலையில் உள்ள தளி கெத்தனூர் அருகே சென்ற பேது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் கிக்கர் நஸ்ரின் தாஜ் வயிற்றில் குத்தியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கபிர் அகமது மற்றும் அவரது மனைவி நஸ்மா தாஜ் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தளி பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com