அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2022 12:48 AM IST (Updated: 27 Feb 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாயில்பட்டி, 
ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு, வீராச்சாமி, சுப்புராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார், அச்சங்குளம், சூரார்பட்டி, விளாமரத்துபட்டி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது அச்சங்குளத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வினோத்குமார் (வயது 30), சூரார்பட்டியை சேர்ந்த கண்ணன் (35), விளாமரத்துபட்டியை சேர்ந்த பாண்டியன் (45) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த தலா 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல தாயில்பட்டி பகுதியில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், வேல் சாமி, ஜவகர் ஆகியோர் தலைமையில் போலீசார் தாயில்பட்டி, கலைஞர் காலனி, எஸ்.பி.எம்.தெரு, வடக்குத்தெரு, விஜயகரிசல்குளம், உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு தயாரித்த எஸ்.பி.எம்.தெருவில் உள்ள முனீஸ்வரன் (46), வடக்கு தெருவில் உள்ள முருகன் (55), விஜயகரிசல்குளம் கருப்பசாமி (60) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.
1 More update

Next Story