சோளிங்கர் நகர சபை தலைவர், துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டி
சோளிங்கர் நகரசபை தலைவர், துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டிஏற்பட்டுள்ளது.
சோளிங்கர்
சோளிங்கர் நகரசபை தலைவலர், துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டிஏற்பட்டுள்ளது.
சோளிங்கரில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27 வார்டுகளில் தி.மு.க. 15 வார்டுகள், காங்கிரஸ் 4 வார்டுகள் என தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 19 வார்டுகளில் வெற்றி பெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 4 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரே ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. 27 வார்டுகளில் 5-வது வார்டில் சுயேச்ைசயாக போட்டியிட்ட எம்.இ.ஆஞ்சநேயன் வெற்றி பெற்றார்.
நகர சபை தலைவர் பதவிக்கு பெண் வேட்பாளர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தி.மு.க.வைச் சேர்ந்த சுசீலா, தமிழ்ச்செல்வி, அன்பரசி ஆகியோருக்கு இடையே தலைவர் பதவிைய ெபற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வில் பழனி, அருண்ஆதி ஆகியோரும், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கோபால் ஆகியோருக்கு இடைேய போட்டி நிலவுகிறது. சோளிங்கர் நகர சபையின் முதல் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிைய பெற மேற்கண்ட அந்தந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சியின் தலைமையிடத்தை நாடி உள்ளனர். கட்சிகளின் தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதன்படி நகர சபை தலைவரும், துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், எனத் தெரிகிறது.
Related Tags :
Next Story