சங்கரன்கோவில் அருகே மலையில் ஏறி கிராம மக்கள் போராட்டம்
மலையில் ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரியூர் கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியூர் கிராம மக்கள் மற்றும் தமிழ் தேசிய அமைப்பினர் நேற்று காலையில் அங்குள்ள மலையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகிரி தாசில்தார் செல்வகுமார் மற்றும் சங்கரன்கோவில் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள், தமிழ் தேசிய அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story