உக்ரைனில் சிக்கி தவிப்பவர்களுக்காக உதவி எண் வெளியீடு: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரஷிய ராணுவம் கடந்த 24-ந் தேதி முதல் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கி தவிக்கின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு கட்டணமில்லா எண்: 1077, தொலைபேசி எண்: 044-27661200, மின்னஞ்சல் msec.tntlr@nic.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story