தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்


தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Feb 2022 9:46 PM IST (Updated: 27 Feb 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வெளிப்பாளையம்:
தனியார் பள்ளி, கல்லூரி  ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவேண்டும் என சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
நாகையில் அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். நாகை மாவட்ட தலைவர் கலைவாணி வரவேற்றார். மாநில பொருளாளர் கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் குமார் கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், மாநில இணைச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பணி பாதுகாப்பு
ஒப்பந்த ஆசிரியர்களை மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி வழங்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வரைமுறை படுத்தப்பட்ட ஊதியம் வழங்க அரசு ஆணை வெளியிட வேண்டும். 
 கொரோனா காலத்தில் வழங்கப்படாத ஊதியத்தை வழங்க உத்தரவு இட வேண்டும். தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். 
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில இணைச்செயலாளர் சவுந்தர்ராஜன், மாநில ஆலோசகர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைத்தலைவர் வாகேஸ்வரி நன்றி கூறினார்.

Next Story