1,651 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்


1,651 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
x
தினத்தந்தி 27 Feb 2022 10:26 PM IST (Updated: 27 Feb 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 1,651 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு  மருந்து முகாம் அரசு ஆஸ்பத்திரி, சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், ரெயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 1,651 மையங்களில்  நடைபெற்றது. இதில் விழுப்புரம் மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடந்த முகாமுக்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை புகட்டி தொடங்கி வைத்தார். 
எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், சுகாதார துணை இயக்குனர் பொற்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 740 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


Next Story