சிந்தகம்பள்ளியில் எருது விடும் விழா
சிந்தகம்பள்ளியில் எருது விடும் விழா நடைபெற்றது.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஜோலார்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, பர்கூர், சாம்பல் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவையொட்டி காளைகள் ஓடும் பாதையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிபாய்ந்து ஓடின. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். முடிவில் குறைந்த நேரத்தில் ஓடி இலக்கை எட்டிய காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் தம்பிதுரை எம்.பி., பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இதில் 29 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
Related Tags :
Next Story