கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2022 10:41 PM IST (Updated: 27 Feb 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடமலைக்குண்டு:
வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று வாலிப்பாறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோடாலியூத்து பிரிவு அருகே கஞ்சா விற்ற வாலிப்பாறையை சேர்ந்த சந்திரனை (வயது 45) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல சீலமுத்தையாபுரம் மூலவைகை ஆற்றங்கரையோரம் கஞ்சா விற்ற தும்மக்குண்டுவை சேர்ந்த முருகனை (55) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 


Next Story