விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நிதி உதவி


விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நிதி உதவி
x
தினத்தந்தி 27 Feb 2022 11:09 PM IST (Updated: 27 Feb 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சுரேஷ் என்ற போலீஸ்காரர் வாகன விபத்தில் உயிரிழந்தார். விபத்தில் இறந்த அவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருடன் பணிபுரிந்த 2013-ம் ஆண்டு போலீசார் வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்கள் மூலம் ரூ.16½ லட்சத்தை திரட்டி சுரேஷ் குடும்பத்தினரிடம் வழங்கினார்கள். இந்த நிதி உதவியை பெற்ற சுரேஷின் மனைவி, உதவி புரிந்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story