1 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து -அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் தொடங்கி ைவத்தார்
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பேரூராட்சியில் நேற்று பொது சுகாதாரத்துறையின் மூலம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை நடத்தியது.
முகாமிற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 1,192 நிரந்தர மையங்கள் மற்றும் 61 நடமாடும் மையங்கள் 17 பயணவழி மையங்கள் என 1,270 மையங்கள் மூலம் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள 87 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கும் 5 முதல் 6 வயது உள்ள 19 ஆயிரத்து 100 குழந்தைகளுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 600 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதில் 5 ஆயிரத்து 60 பேர் பணியாற்றுகிறார்கள். போலியோ இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என அனைத்து துறையினரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தென்னவன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் புசலான், நெற்குப்பை நகர் செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story






