தென்னிந்திய அளவிலான கபடி போட்டி
சங்கரன்பந்தலில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடந்தது.
பொறையாறு:
சங்கரன்பந்தலில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடந்தது.
மின்னொளி கபடி போட்டி
பொறையாறு அருகே இலுப்பூர் சங்கரன்பந்தலில் 3 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
இலுப்பூர்-சங்கரன்பந்தல் விளையாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பிரபல நிறுவன அணிகள், துணை ராணுவ அணி, சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ரப்பர் ஆடுகளத்தில் நடைபெறும் போட்டிகள் நாக்-அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெறுகிறது.
இரு பிரிவு அணிகள் மோதின
போட்டியில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. 25 நடுவர்கள் பங்கேற்று போட்டிகளை நடத்துகின்றனர். போட்டியை மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ் தொடங்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் சென்னை சிட்டி போலீஸ் அணியும்- திருப்பூர் மாவட்ட அணியும் மோதின. இதில் சென்னை சிட்டி போலீஸ் அணி வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் பாரதி திருநெல்வேலி அணியும்- சிட்டி போலீஸ் அணியும் மோதின. இதில் சிட்டி போலீஸ் அணி வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் மாதா பெங்களூரு அணியும் - கெர்குலிஸ் கேரளா அணியும் மோதின. இதில் மாதா பெங்களூரு அணி வெற்றி பெற்்றது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டிகளை அ.தி.மு.க. அவைத்தலைவர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், சக்தி, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ஜனார்த்தனம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
Related Tags :
Next Story