இந்து ஜனநாயக முன்னணி ஆர்ப்பாட்டம்


இந்து ஜனநாயக முன்னணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2022 11:46 PM IST (Updated: 27 Feb 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் இந்து ஜனநாயக முன்னணி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம், 

கர்நாடக மாநிலத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்து ஜனநாயக முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் கோதாவரி தலைமை தாங்கினார். தென்மண்டல அமைப்பாளர் முனியசாமி, மாவட்ட அமைப்பாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் திருப்புல்லாணி அரியமுத்து, போகலூர் கருப்பையா, நயினார்கோவில் தியாகராஜன், மண்டபம் சுந்தரமூர்த்தி, பாம்பன் காசிநாதன், ராமநாதபுரம் பாலகிருஷ்ணன், செல்வராஜ், வழுதூர் சங்கர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகி அரியமுத்து நன்றி கூறினார்.


Next Story