தீக்குளித்து பெண் தற்கொலை
கரூர்தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
குளித்தலை
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா செய்யானம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் என்பவரின் மனைவி சுமதி (வயது 39). இவர் தன் கணவரை பிரிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. தற்போது தன் மகள், மருமகளுடன் கரூர் மாவட்டம் குளித்தலை கீழ கொடிக்கால் தெரு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் சுமதி தன் கணவரை பிரிந்ததால் மனவருத்தத்தில் சம்பவத்தன்று தன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை அவரது உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






