தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம்
திருச்சி சங்கிலியாண்டபுரம் 3-ம் குறுக்கு பாத்திமா தெருவில் சரியான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் கடந்த ஒரு மாதமாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கீதா, சங்கிலியாண்டபுரம், திருச்சி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி பாலக்கரை பீமநகர் ரெயில்வே மேம்பாலத்தில் அடிப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மண் மற்றும் கற்கள் அதிகளவில் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து கூட செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை சுத்தம் செய்து பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரியா, திருச்சி.
மெகா குழியால் ஆபத்து
திருச்சி மாவட்டம், தொட்டியம், தோளூர்பட்டி கிராமத்தில் நீரேற்று குடிநீர் தொட்டி கட்டுவதற்காக கடந்த ஒராண்டுக்கு முன்பு பெரிய குழி தோண்டப்பட்டு பாதியிலேயே வேலை நின்று விட்டது. தற்போது அந்த குழியில் தண்ணீர் தேங்கி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இசக்கிப்பாண்டி, தோளூர்பட்டி, திருச்சி.
கலங்கலாக வரும் குடிநீர்
திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு காந்தி நகர், வெனிஸ் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கலங்கலாக வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்துமதி, திருச்சி.
Related Tags :
Next Story