உக்ரைனில் சிக்கி தவிக்கும் உளுந்தூர்பேட்டை மாணவி

உக்ரைனில் சிக்கி தவிக்கும் உளுந்தூர்பேட்டை மாணவியை மீட்கக்கோரி கலெக்டருக்கு தந்தை கடிதம் அனுப்பியுள்ளார்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் உளுந்தூர்பேட்டை மாணவி
Published on

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன், வக்கீல். இவரது இரண்டாவது மகள் பிரபாவதி, உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகிறார். தற்போது உக்ரைன்-ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் பிரபாவதி தனது தந்தையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னுடன் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர். இங்கு எப்போதும் குண்டு வெடிக்கும் சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருப்பதால் தங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. அதனால் இந்திய அரசாங்கத்திடம் முறையிட்டு, உடனடியாக தங்கள் அனைவரையும் மீட்க வேண்டும் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து அன்புசெல்வன், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகளை மீட்க கோரி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பிரபாவதி உக்ரைனில் சிக்கி தவிப்பது அந்த குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com