நெல்லை தாலுகா அலுவலகத்தில் பெண் ஊழியர்களை அறையில் வைத்து பூட்டிய கிராம நிர்வாக அலுவலர் கைது


நெல்லை தாலுகா அலுவலகத்தில் பெண் ஊழியர்களை அறையில் வைத்து பூட்டிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2022 2:18 AM IST (Updated: 28 Feb 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

பெண் ஊழியர்களை அறையில் வைத்து பூட்டிய கிராம நிர்வாக அலுவலர் கைது

நெல்லை:
நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்தவர் ஜோசப் பால்ராஜ். இவருடைய மனைவி சாரதா (வயது 50). இவர் நெல்லை தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவில் முதல்நிலை வரைவாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று பணியில் இருந்தபோது, நெல்லை துலுக்கர்குளம் கிராம நிர்வாக அலுவலர் சூரியதேவன் அங்கு வந்து, சாரதாவிடம் ஒரு ஆவணம் குறித்து கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் சூரியதேவன் சாரதாவை அவதூறாக பேசி, அலுவலக அறை கதவை வெளியே பூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சாரதா மற்றும் அவருடன் பணியாற்றிய மற்ற பெண் ஊழியர்கள் அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர். இதுகுறித்து சாரதா நெல்லை சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியதேவனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

Next Story