போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது


போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2022 2:23 AM IST (Updated: 28 Feb 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்மலைப்பட்டி
 திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ் அறிவுரையின்பேரில் அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
 அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த செந்தண்ணீர்புரத்தை சேர்ந்த அசன்அலி(வயது 22), அரியமங்கலம் காமராஜ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அஷ்ரப்(20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகளும், ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மேலும் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story