கடையம் அருகே மண் அள்ளிய லாரி, டிராக்டர் பறிமுதல் 2 பேர் கைது

x
தினத்தந்தி 28 Feb 2022 2:52 AM IST (Updated: 28 Feb 2022 2:52 AM IST)
மண் அள்ளிய லாரி, டிராக்டர் பறிமுதல் இருவரை கைது செய்தனர்
கடையம்:
கடையம் அருகே ஆசிர்வாதபுரம் பகுதியில் அனுமதியின்றி மண் எடுப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேஷகிரி தலைமையில் போலீசார் அந்தப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டிருந்த துரைசாமிபுரத்தைச் சேர்ந்த திருமலை மகன் சார்லஸ் (வயது 40), மேட்டூரைச் சேர்ந்த சீனி மகன் செல்வின்துரை (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மண் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரி, டிராக்டர் மற்றும் 2 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





