கலந்தாய்வு கூட்டம்
கலந்தாய்வு கூட்டம்
சிவகிரி:
சிவகிரி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வருகிற 12-ந் தேதியன்று நடைபெற உள்ள (லோக் அதாலத்) தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வைத்து நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் மற்றும் போலீஸ் நிலைய வழக்குகள், வனத்துறை வழக்குகள், வருவாய் துறை வழக்குகள் போன்றவை தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாக சமரச தீர்வு காண கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கி, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரசு வக்கீல் பேட்ரிக் பாபு, சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், வாசுதேவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிவகிரி வனவர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story