‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
இரவில் நிற்காமல் செல்லும் பஸ்
திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் சாணார்பட்டி வழியாக சென்று வருகின்றன. பகலில் இந்த பஸ்கள் அனைத்தும் கொசவப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கிறது. ஆனால் இரவில் கொசவப்பட்டியில் பஸ்கள் நிற்காமல் சாணார்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே இரவில் கொசவப்பட்டியில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?.
-தாமஸ் அந்தோணி, கொசவப்பட்டி.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
ஆண்டிப்பட்டி 8-வது வார்டு நல்லதண்ணீர் கிணற்றுப்பாதை தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசுப்பிரமணியன், ஆண்டிப்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
ஒட்டன்சத்திரம் தாலுகா லெக்கையன்கோட்டையில் இருந்து புதுஎட்டமநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-சந்திரன், லெக்கையன்கோட்டை.
அடிப்படை வசதி வேண்டும்
பழனியை அடுத்த கீரனூர் பஸ் நிலையத்தில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-கவுதம், கீரனூர்.
-----------------------
Related Tags :
Next Story






