கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி
அயனம்பாக்கம் அருகே சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25). இவர், சென்னையை அடுத்த தாம்பரத்தில் தங்கி, அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் அருகே சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சதீஷ், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சதீஷ், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மூர்த்தி (34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story