சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சிவகங்கை,
அ.தி.மு.க.வினர் மீது வழக்குகள் போடும் தி.மு.க. அரசை கண்டித்து சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சிவகங்கை நகர் செயலாளர் என்.எம்.ராஜா வரவேற்று பேசினார். இதில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆசைதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் புவனேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர்கள் ராமநாதன், சுந்தரபாண்டியன், மாவட்டஇளைஞர் அணி இணை செயலாளர் வக்கீல் ராஜா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோவன், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரெத்தினம், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் வெண்ணிலா சசிகுமார், கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கே.வி.சேகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story