கலெக்டரின் நேரடி உதவியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


கலெக்டரின் நேரடி உதவியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
x
தினத்தந்தி 28 Feb 2022 10:27 PM IST (Updated: 28 Feb 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டரின் நேரடி உதவியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை, 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டு துணை கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு முதல் மாவட்ட கலெக்டரின் நேரடி உதவியாளர் (சட்டப்பிரிவு) பணியிடம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த பணியிடமும், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது மட்டும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின்னர், கடந்த 9 ஆண்டுகளாக கலெக்டரின் சட்டப்பிரிவுக்கான நேரடி உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சட்டப்படிப்பு முடித்தவர்கள்தான் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். 
பெரும்பாலான கலெக்டர் அலுவலகங்களில் சட்டப்பிரிவுக்கான நேரடி உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்காரணமாக, பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் மாவட்ட கலெக்டரின் நேரடி உதவியாளர் (சட்டப்பிரிவு) பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிட்டு, அந்த பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது. எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Next Story