சூளகிரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சூளகிரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, கோபிநாத் மற்றும் போலீசார், சூளகிரியில், ராயக்கோட்டை சாலையில் உள்ள வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது, மாதரசனப்பள்ளி கிராமத்தில் சாமையன் (வயது58) என்பவரது வீட்டில் 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இந்த ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து சாமையனை கைது செய்த போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story