ஓசூரில் ஓட்டல் காவலாளி கொலை கொள்ளை கும்பலை பிடிக்க 6 போலீஸ் தனிப்படை அமைப்பு

ஓசூரில் ஓட்டல் காவலாளியை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளை கும்பலை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் ஓட்டல் காவலாளி கொலை கொள்ளை கும்பலை பிடிக்க 6 போலீஸ் தனிப்படை அமைப்பு
Published on

ஓசூர்:

ஓசூரில் ஓட்டல் காவலாளியை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளை கும்பலை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

காவலாளி கொலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 60). இவர், ஆவலபள்ளியில் உள்ள மகள் செல்வி வீட்டில் தங்கி ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ந்தேதி ஓட்டலின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் கல்லாப்பெட்டியில் திருட முயன்றது.

இதையறிந்த தாமோதரன் சத்தம் போட்டதால் அந்த நபர்கள் கத்தியால் காவலாளியை சரமாரியாக குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் ஓட்டல் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 தனிப்படை அமைப்பு

இந்தநிலையில் கொள்ளையர்களை பிடிக்க ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (கலால்) சிவலிங்கம் தலைமையில், ஓசூர் டவுன், ஓசூர் அட்கோ, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, மகாராஜகடை மற்றும் மத்தூர் ஆகிய 6 போலீஸ் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் ஓசூர் சுற்றுவட்டாரத்திலும் மற்றும் பெங்களூரு பகுதியிலும் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com