நல்லம்பள்ளி பென்னாகரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்


நல்லம்பள்ளி பென்னாகரத்தில்  போலியோ சொட்டு மருந்து முகாம்
x
தினத்தந்தி 28 Feb 2022 11:30 PM IST (Updated: 28 Feb 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி பென்னாகரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

நல்லம்பள்ளி:
 நல்லம்பள்ளி, பென்னாகரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
போலியோ சொட்டு மருந்து
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. அதன்படி நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், பஸ் நிலையம் மற்றும் கோவிலூர் ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 
இந்த முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், கிராம வளர்ச்சிக்குழு தலைவர் மூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தடங்கம் அரசு துணை சுகாதார நிலையம், சத்யாநகர், பழைய குவார்ட்டர்ஸ் ஆகிய இடங்களில் நடந்த முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் கவிதாமுருகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிராம வளர்ச்சிக்குழு தலைவர் முருகன் உள்பட கலந்து கொண்டனர்.
பென்னாகரம்
பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயசந்திரபாபு மற்றும் செவிலியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்  போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

Next Story