வாணியம்பாடி அருகே தரைபாலத்தில் பள்ளத்தில் சிக்கிய பஸ்


வாணியம்பாடி அருகே தரைபாலத்தில் பள்ளத்தில் சிக்கிய பஸ்
x
தினத்தந்தி 28 Feb 2022 11:40 PM IST (Updated: 28 Feb 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே தரைபாலத்தில் பள்ளத்தில் பஸ் சிக்கியது

ாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் உள்ள கானாற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருக்கும் தரைப்பாலத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலத்தின் இருபக்கமும் அரிப்பு ஏற்பட்டு பாலம் பயன்படுத்த முடியாத, ஆபத்தான நிலையில், போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு இருந்தது. 

இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் இரு பக்கமும் ஏற்பட்டிருந்த மண் அரிப்பை சரிசெய்ய தற்காலிகமாக முரம்பு மண்ணை கொட்டி நிரப்பி போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் நேற்று திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடியை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் பாலத்தின் பக்கவாட்டில் கொட்டப்பட்டு இருந்த மண்சாலையில் சரிந்து விபத்தில் சிக்கியது. டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை அவசர அவசரமாக பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்கும் முயற்சி நடந்தது.

Next Story