சீலேரி கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் 14 பேர் காயம்


சீலேரி கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் 14 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Feb 2022 11:42 PM IST (Updated: 28 Feb 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

சீலேரி கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் 14 பேர் காயமடைந்தனர்.

அணைக்கட்டு

அணைக்கட்டு தாலுகா சீலேரி கிராமத்தில் பொன்னி அம்மன் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், தாசில்தார் விநாயகமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, பா.ம.க. மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து 200 காளைகள் கொண்டு வந்திருந்தனர். அதில் 163 காளைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கினர். காலை 11 மணி முதல் ஒவ்வொரு காளையாக  அவிழ்த்து விடப்பட்டன. நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். காளைகள் ஓடும் பாதையில் இளைஞர்கள் திரண்டு இருந்ததால் சில காளைகள் தடுப்பு கம்புகளில் முட்டிமோதின. அப்போது மாடுகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர். ஒருவர் கை, கால் முறிந்த நிலையில் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைக்கப்பட்டார்.

பள்ளிகொண்டா மற்றும் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர்கள் சுப்புலட்சுமி, உலகநாதன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.30 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.20 ஆயிரம், ஐந்தாவது பரிசாக ரூ.15 ஆயிரம் என 41 பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story