சிங்கம்புணரியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு


சிங்கம்புணரியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2022 11:53 PM IST (Updated: 28 Feb 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அதிகரித்து உள்ளது. எனவே சாலையில் மையத்தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அதிகரித்து உள்ளது. எனவே சாலையில் மையத்தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

தாறுமாறாக செல்லும் வாகனங்கள்

 சிங்கம்புணரி தொழில் மிகுந்த நகரம் ஆகும். இந்தப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் தேங்காய் உரித்தல், எண்ணெய் உற்பத்தி, கயிறு, பொரி தயாரித்தல், இரும்பு தொழிற்சாலைகள் நூற்பாலைகள் போன்றவை உள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். திண்டுக்கல்-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சிங்கம்புணரி நகரிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே சேவை சாலையும் அமைக்கப்பட்டு அங்கு வாகன போக்குவரத்து இயங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பில் சுவர் இல்லாததால் இருபுறமும் செல்லும் வாகனங்கள் போட்டி போட்டிக்கொண்டு தாறுமாறாக செல்கின்றன. இதனால் அங்கு விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
 இதுகுறித்து சமுக ஆர்வலர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:-


மைய தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

 கோவையில் இருந்து தேவகோட்டை பகுதிக்கு ெசல்பவர்கள் சிங்கம்புணரி வழியாக சென்றால் குறைந்த தூரத்தில் சென்று விடலாம். இதனால் சிங்கம்புணரி நகர் வழியாக அதிகமான வாகனங்கள் செல்கின்றன.அரணத்தங்குண்டு முதல் சிங்கம்புணரி பஸ் நிலையம் வரை சேவை சாலை இருந்தும் அதன் வழியாக வாகனங்கள் செல்வதில்லை. திண்டுக்கல் மெயின் ரோட்டில் தான் பெரும்பாலான வாகனங்கள் செல்கின்றன. சேவை சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அதை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதில்லை.திண்டுக்கல் மெயின் ேராட்டில் மையத்தடுப்பு இல்லாததால் வாகன விபத்து அதிகரித்து உள்ளது. எனவே சாலையின் மையத்தில் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story