போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டம்


போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 4 April 2022 7:48 PM IST (Updated: 4 April 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டம்

கூடலூர்

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை தாங்கினார். கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா கலந்துகொண்டு பேசும்போது, போதைப்பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். 

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  பின்னர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் அருண்குமார் கூறுகையில், கல்வி மட்டுமே சமூகத்தை முன்னேற்றும் ஆயுதம். கல்வியை இரு கண்களாக பாவித்து உரிய முறையில் கற்றால் மட்டுமே எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும். மாணவர்கள் தேவையில்லாத பழக்கவழக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர் கூறும் அறிவுரைகளை புரிந்து செயல்பட வேண்டும் என்றார். இதில் தலைமை காவலர்கள் புஷ்பா, சுகந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story