ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டி
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் ஆன்லைன் மோசடி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் பேசும்போது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பரிசு பொருட்கள் கிடைத்தது என்று குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதற்கு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு கூறி செல்போனுக்கு வரும் ரகசிய குறியீடு எண்ணை வாங்கிக்கொண்டு பணத்தை பறிக்கும் செயல் நடக்கிறது.
எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஆன்லைன் பரிசுக்கு ஏமாறக்கூடாது. ரகசிய குறியீடு எண் மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்தால், 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் போலீஸ் உதவிக்கு 1930 என்ணை தொடர்புகொள்ள வேண்டும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story