காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2022 7:55 PM IST (Updated: 4 April 2022 7:55 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம்:
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து அதற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் காங்கிரஸ் கட்சி நகரத்தலைவர் வைரம், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் மகிளா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்தியகலா, நகராட்சி கவுன்சிலர் தங்கதுரை, மாவட்ட சிறுபான்மை பிரிவை சேர்ந்த ரபிக் சோட்டாபாய், அப்சல் உசேன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்ைவ கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Next Story